Show all

ஊழலை ஒழிக்க திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்த’ அமைக்கப்படும்

 திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்த’ அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

     மக்கள் விடியல் மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஒரகடம் அருகிலுள்ள ஆப்பூரில் திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

     சென்னையில் ஏற்பட்ட வௌ;ளச் சேதத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பில் அரசு அலட்சியமாக நடந்து கொண்டதே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தால், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

     வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு நிவாரணம் முழுமையாகச் சென்று சேரவில்லை. அவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     அதிமுக தேர்தல் நேரத்தில் 53 அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் 50 அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. திருமழிசையில் துணை நகரம் அமைக்கப்போவதாகக் கூறினர். அது செயல்படுத்தப்படவில்லை. மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்துக்கு தொழில் முதலீட்டாளர்கள் வருவதற்கே தயங்கும் நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், தொழில் முதலீட்டாளர்களை மதிப்போம்.

     மின்சாரம் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவோம். இளைஞர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு பயிற்சி அளித்து தேசிய அளவில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கான ஏற்பாடுகளை திமுக செய்யும். அதிமுக அரசில் ஊழல் மலிந்துவிட்டது.

     ஊழலை ஒழிக்க திமுக ஆட்சிக்கு வந்ததும் ;லோக் ஆயுக்த’ அமைக்கப்படும் என்றார். கூட்டத்தின் முடிவில், திமுக ஆட்சியை அமைப்பது தொடர்பாக உறுதி முழக்கம் எழுப்பப்பட்டது.

     இக் கூட்டத்தையொட்டி பல்வேறு வாகனங்கள் ஒரகடம்- சிங்கப்பெருமாள் கோவில் சாலை வழியாக வந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.