Show all

திமுக- அதிமுக கூட்டணி! தேர்தலில் போட்டியிட அல்ல; திருவாரூர் இடைத்தேர்தல் வேண்டாம் என்பதற்காக

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா வெள்ளிக்கிழமை சந்தித்து வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புயல் நிவாரண பணிகள் இன்னும் முடிவடையவில்லை. திருவாரூர் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் நடத்திக் கொள்ளலாம் என்றும், உழவர்களுக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை. எனவே இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இருபது தொகுதிக்கு இடைத்தேர்தலை எதிர்பார்த்த நிலையில், ஒற்றைத் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலா? திமுகவும், அதிமுகவும் அஞ்சுகின்றன. தினகரனுக்கு அதிமுகவில் எண்பது விழுக்காட்டினர் ஆதரவு இருப்பதாக, பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தும் நிலையில் இந்த இடைத்தேர்தலில், தினகரன் வெற்றியை சுருட்டிக் கொண்டு போய் விட்டால், அதிமுகவின் எதிர்காலமும், திமுகவின் எதிர்பார்ப்பும் கேள்விக் குறியாகிவிடும் என்று அஞ்சுகின்றன அதிமுகவும், திமுகவும். தற்போதைக்கு இந்தத் தேர்தல் தினகரனுக்கு வாய்ப்பாகி விடாமல் இருக்க அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்திருக்கின்றன, திருவாரூர் இடைத்தேர்தல் வேண்டாம் என்பதற்காக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.