Show all

ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் நீண்ட கால முயற்சி...

ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெறவேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூம் இந்தத் தகவலைக் கூறினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைக்கவும் மேலும் சில நாடுகளைச் சேர்க்கவும் ஐநா சம்மதித்து இருப்பது இந்தியாவின் வெற்றிக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி  என்று அவர் தெரிவித்தார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்ய விருப்பமுள்ள மற்ற பல நாடுகளும் இந்த விவகாரத்தை மேலும் வலியுறுத்தி வருவதை விகாஸ் ஸ்வரூப் சுற்றிக்காட்டினார். எனவே ஐநா அவையில் நிரந்தர  உறுப்பினர் பதவி இந்தியாவிற்கு விரைவில் கிடைக்கும்  என்று நம்பிக்கை வலுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்யும் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மறு சீரமைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இந்தியா வேறு நாடுகளின் ஆதரவை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐநா நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் எழுத்து பூர்வமான ஆதரவை வழங்காவிட்டாலும் இந்த  நாடுகள் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஐநா அவையில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இதில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட  உயர்மட்ட குழுவில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐநா அவையின் 70வது ஆண்டு விழா அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் இந்தியாவின் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. இந்தியாவைப் போன்றே ஐநா நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகள் விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.