Show all

அறிவியல் தொடர்பான ஆயிரக்கணக்கான கருத்துகளும் சிந்தனைகளும் சமஸ்கிருத இலக்கியத்தில்

லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

உயர்கல்வியை மேம்படுத்த அமைக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு அண்மையில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், அறிவியல் தொடர்பான ஆயிரக்கணக்கான கருத்துகளும், சிந்தனைகளும் சமஸ்கிருத இலக்கியத்தில் செறிந்திருப்பதால் அந்த மொழிப்பாடத்தை உயர்கல்வி மாணவர்களுக்கு கற்பிக்க பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, சமஸ்கிருத மொழியை கற்பிக்குமாறு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை நடுவண் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.