Show all

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி யின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஊழல், வேலையில் லாத் திண்டாட்டம், பணவீக்கம் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், பாஜகமீது நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆதலால், டில்லி சட்டப் பேரவைத் தேர்தலைக் காட்டிலும், பிகார் சட் டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். பாஜகவின் ஆணவத்தை நாங்கள் சுக்குநூறாக்குவோம்.

பிகாரில் இருந்து பாஜகவை விரட்டியடிப்ப தென்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். பாட்னா காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்வாபிமான் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். காந்தி மைதானக் கூட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதைப் பார்த்து, பாஜகவுக்கு மாரடைப்பே ஏற்பட்டிருக்கும்.

அண்மையில் முசாஃபர்பூரில் நடை பெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதீஷ்குமாரின் மரபணு குறித்து விமர்சித்தார். தங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும், தனது உடலில் வர்த்தக ரத்தம் ஓடும் வெளிநபர், தங்களை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்பதையும் தேர்தல் மூலம் பாஜகவுக்கு பிகார் மக்கள் உணர்த்துவார்கள் என்று லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

பிகார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ். சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன.

பாஜக தலைமையில், லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய லோக் சமதாகட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகப் போட்டியிடுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.