Show all

மோடியை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது, காங்கிரஸ்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தற்போது பயணம் சென்றுள்ள வேளையில், அவரை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது காங்கிரஸ்.   

பதவியேற்று பதினைந்து மாதங்களில் 29 வெளிநாடுகளுக்கு மோடி பயணித்ததால் நாட்டுக்கு என்ன நன்மை நடந்திருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் பணத்தில் இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ள மோடி, அவர் கூறியபடி எந்தெந்த நாடுகள் இந்தியாவில் எத்தனை கோடிகளில் முதலீடு செய்துள்ளன? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜப்பான், சீனா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணித்தபோது அவர்கள், நம் நாட்டில் முதலீடு செய்வார்கள் என நம்பிக்கைத் தெரிவித்த மோடி, செல்பி எடுத்து, தன்னை விளப்பரப்படுத்திக் கொள்வதிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிரதமரது சுற்றுலாக்கள் அவரது முந்தைய பயணங்களின் வெற்றியைக் கொண்டே அமைய வேண்டுமே தவிர நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமராக பதவியேற்ற இந்த பதினைந்து மாதங்களில் மோடி மூன்றரை மாதங்களை வெளிநாடுகளில் மட்டுமே கழித்ததாக ரன்தீப் குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.