Show all

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் நடு சென்னை வேட்பாளர் தெஹ்லான் பாகவி! தினகரனின் அமமுக கூட்டணி கட்சி

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரனின் அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு கட்சியான, இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு நடு சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவது என அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, கடந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து முப்பது தொகுதிகளில் போட்டியிட்டு 0.2 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.