Show all

பொங்கல் கொண்டாட்டம்! தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது அவனியாபுரம் சல்லிக்கட்டு!

அவனியாபுரம் சல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.700 காளைகள், 730 வீரர்கள் களத்தில் இறங்கி அசத்திக் கொண்டிருக்கின்றனர். மக்கள் ஆரவாரம் விண்ணைத் தொட்டு எதிரொலிப்பதாய் இருக்கிறது.

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொங்கல் கொண்டாட்டத்தின்- தமிழகமே அணிதிரண்டு போராடி மீட்ட, வீரவிளையாட்டு சல்லிக்கட்டு- தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. அந்த வகையாக மதுரை மாவட்டம் அவனியாபுரம் சல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

 

இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அணியமாக இருக்கின்றனர் 5க்கும் ஏற்பட்ட சடுதிவண்டிகள் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

சல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு கிழமையாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியைக் காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து குவிந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்திற்கு மக்கள் வந்துள்ளனர். 

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு வழங்க ஏராளமான பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காளைகளால் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.