Show all

லிங்கா திரைப்படத்தின் கதையை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

கதை திருடப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் லிங்கா திரைப்படத்தின் கதையை வருகிற 14-ஆம் தேதி தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது.

 

லிங்கா திரைப்படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் லிங்கா படக் கதையை சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு முல்லைவனம் 999 படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லிங்கா கதையை சமர்ப்பிக்குமாறு லிங்கா படக்குழுவுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால், அவர்களிடம் கையொப்பம் பெற்று கதையை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி விஸ்வநாதன் முன் வௌ;ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லிங்கா படக்குழுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கதையை தாக்கல் செய்வதற்கு மேலும் அவகாசம் கோரினர். இதற்கு இயக்குநர் ரவிரத்தினம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் முல்லைவனம் 999 படத்தின் கதையை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டோம். எதிர்தரப்பினரும் லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்தால்தான் இரு படத்தின் கதையையும் ஒப்பிட்டு விசாரிக்க முடியும். எனவே, லிங்கா திரைப்படத்தின் கதையை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

 

இதைப் பதிவு செய்த நீதிபதி, லிங்கா திரைப்படத்தின் கதையை வருகிற 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.