Show all

கருப்புக் கொடி! மோடிக்கு எதிராக தொடரும் ஒரே வகையான போராட்டம்; சலிப்பில் தமிழக மக்கள்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமைஅமைச்சர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தொடர்வண்டி நிலையம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.  அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

கஜினி முகமது மாதிரி மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதும், மதவாதத்திற்கு எதிரான கட்சிகள் கருப்பு கொடி கட்டுவதும் ஏதோ அரசியல் நாடகம் போல மக்களைச் சலிப்படையவே செய்கிறது.

திமுக இதுபோலவெல்லாம் தொடக்க காலத்தில் உப்பு சப்பு இல்லாத கருப்புக் கொடி போராட்டத்தை மட்டுமே நம்பியிருந்திருக்குமானால், திமுக காங்கிரசை தமிழகத்திலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் விரட்டியிருந்திருக்க முடியாது. 

அண்ணா பெரியார் காலத்து திமுகவில்;, ஒரு வகையான போராட்டம் ஒரு முறைதான் நிகழும். அடுத்த முறை போராட்டத்தின் வடிவம் வேறுவகையாக முன்னெடுக்கப் படும். கட்டை வண்டி போராட்டம், மிதிவண்டி பேரணி, மனிதசங்கலி, பலகுரல் மன்னர்களின் கலைநிகழ்ச்சி, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், இன்னிசை நிகழ்ச்சி, மேடைநாடகம், அண்ணாவின் பொதுக்கூட்டம், எம்ஜியார் பொதுக்கூட்டம், நாஞ்சிலார், விடுதலை விரும்பி, வைகோ, நெடுஞ்செழியன், இப்படி பொதுக்கூட்டங்கள், வெற்றிகொண்டானின் அனல் பறக்கும் பேச்சு, தொடர்வண்டி மறியல் போராட்டம் என்று மக்கள் இலட்சக் கணக்கில் அணிதிரள்வார்கள்.

தற்போதைய திமுகவால்- அற்பம் அன்றைய அனந்தநாயகிக்கு, ஆயிரத்தில் ஒரு பங்கு கூட திறமையில்லாத தமிழிசை, எச்.இராஜா, பொன்.இராச்சந்திரன் போன்ற சில்லுவண்டு அடவடிகளைக் கூட முறியடிக்க முடிய வில்;லை. மதவாத பாஜகவை அப்புறப் படுத்த, திமுகவிடம்  இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறார்கள் தமிழக மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.