Show all

அதிமுக விளம்பரங்களுக்குத் தடை! இலங்கை படுகொலை, நிலஅபகரிப்புகளுக்கு திமுக காரணம் என்பது போல சித்தரித்ததால்

கொத்து கொத்தாய் நாங்கள் வீழ்ந்ததும் போதும் குடும்பம் குடும்பமாக நீங்கள் வாழ்ந்ததும் போதும் என்ற அதிமுக விளம்பரம் கொத்து கொத்தாக வீழ்ந்தது என்பது ஈழத்தில் நடந்த போரைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்ட நிலையில் இந்த விளம்பரத்தை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அனைத்து ஊடகங்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது,
இலங்கை படுகொலை மற்றும் நில அபகரிப்பு சம்பவங்களுக்கு திமுக காரணம் என்பது போல சித்தரித்து அதிமுக சார்பில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும், தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்பும் முயற்சி நடப்பதாகவும் திமுக சட்டப்பிரிவு புகார் அளித்திருக்கிறது.
உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்த நடைமுறைகள் மற்றும் கம்பிவடத் தொலைக்காட்சி சட்ட விதிகளின்படியும் அறநெறிகள், கண்ணியம், மதம் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றில் தனி தலையீடுகள் செலுத்தி வாடிக்கையாளர்களை திசைதிருப்பிவிட கூடாது.
எனவே சட்டவிதிகளின் அடிப்படையில் மேற்கண்ட 2 விளம்பரங்கள் விளம்பரக் காணொளிகள் ஒளிபரப்புவதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும். இது மீறப்பட்டால் அது சட்டவிதிகளை மீறிய செயலாகவே கருதப்படும். என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிமுகவின் விளம்பரத்தில்- குடும்பம் குடும்பமாய் என்பது நேருவின் குடும்பத்தையும், கலைஞர் குடும்பத்தையும் குறிக்கிறது என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் கொத்து கொத்தாய் மடிந்தது ஸ்டெர்லைட் போராட்டத்தில்தானே. அந்தக் கொலைப் பலிகளுக்கு காரணம் அதிமுகதானே என்று மக்கள் குழம்பியிருந்த நிலையில், கொத்தாக கொத்தாக மடிந்தது என்பது இலங்கையின் இறுதிப் போரில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட சிங்களவர்களுக்கு இந்தியா தமிழர்களைக் கொன்று குவிக்க வேதியியல் ஆயுதங்களை வழங்கியது என்கிற அரங்கத்திற்கு வராத கமுக்கச் செய்தி குறித்தானது என்றும், அதற்கு காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுகவும் தானே உடந்தை என்பது குறித்தானது என்கிற தகவல் வெளிவந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த விளம்பரங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.
இந்த விளம்பரங்களின் உள்ளீடு இதுதானா என்று கேள்விப்படுகிற தமிழ் மக்கள்: 
'கடந்த தேர்தலில் இதே கருத்துப் பரப்புதலை வைத்துதானே பாஜகவும், அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றின. ஆனால், 
1.அதிமுக- சதுப்பு நிலங்களில் மனை போடுவதை நிறுத்தவும் இல்லை, காவிரி, பாலாறு படுகையில் மணற் கொள்ளையை நிறுத்திக் கொள்ளவும் இல்லையே. 
2.பாஜக- இராஜபக்சேவுக்கு எதிராக ஐநாமன்றத்தில் குரல் கொடுக்கவும் இல்லை. இராஜிவ் கொலைக்குற்றத்தில் தண்டனை கடந்து சிறையில் இருக்கிற அந்த ஏழு பேரை விடுவிக்கவும் இல்லையே. அப்புறம் எதற்கு காங்கிஸ்- திமுக மீது அதே குற்றச்சாட்டு. 
3.பாதிக்கப் பட்டவரின் மகன் மகளான இராகுல், பிரியங்கவே அந்த ஏழு பேர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த தடையும், மனவருத்தமும் இல்லை என்ற போதும் கூட பாஜகதானே அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்கிறது. 
4.இராஜிவ் கொலையும் சரி- அதற்காக சிங்களவர்களுக்கு இந்தியா உதவியதாக சொல்லப்படுகிற செய்தியும் சரி- பார்ப்பனிய அதிகாரிகள் முறைகேடு, அன்னிய சதி காரணமானதா, நேரடியாக காங்கிரஸ் அரசு பற்றியதா என்ற மர்ம முடிச்சு அவிழ்க்க படாமல்தானே இந்த எழுவரோடு இராஜிவ் கொலை வழக்கு முடித்துக் கொள்ளப் பட்டது.' என்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,123.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.