Show all

நடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம்

நடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை நடுவண் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, அரசு அதிகாரிகள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 தடவைதான் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மேல் செல்ல விரும்பும் துறை செயலாளர்கள், பிரதமரின் ஒப்புதலைப் பெற வேண்டும். வேறு யாரையும் அனுப்ப முடியாத பட்சத்தில்தான், செயலாளர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளலாம். ஒரு துறையின் மந்திரியும், செயலாளரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக்கூடாது.

 

மேலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, தவிர்க்க முடியாததாக இல்லாதபட்சத்தில், செயலாளர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. எந்த வெளிநாட்டு பயணமாக இருந்தாலும், 5 வேலை நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்று புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.