Show all

வெளிமாநில மதுபானங்கள் நமது மாநிலத்தில் விற்பனையாவது சரியானதல்ல

வெளிமாநில மதுபானங்கள் நமது மாநிலத்தில் விற்பனையாவது சரியானதல்ல என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில அரசின் கலால், வருவாய், வணிக வரி, போக்குவரத்து, முத்திரைத்தாள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்

அப்போது சித்தராமையா,

அந்தந்த மாநிலங்களில் உற்பத்தியாகும் மதுபானங்கள் அந்த மாநிலங்களிலேயே விற்பனையாக வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

எனவே, வெளிமாநில மதுபானங்கள் நமது மாநிலத்தில் விற்பனையாவது சரியானதல்ல. கலால் துறை இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் குறைந்த விலை மதுபானங்களை இங்கே அனுமதிக்கக்கூடாது.

இதைத் தடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மாநிலத்தில் புதிதாக 1,560 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதன் மூலம் மக்களுக்கு சுலபமாக மதுபானம் கிடைக்கும். மேலும் சட்டவிரோத மதுபானமும் தடுக்கப்படும். இதன் காரணமாக அடுத்த ஆண்டு கலால் வரி இன்னும் அதிகமாக வசூலாகும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.