Show all

கேரள காவல்துறையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாஜக! தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு சென்ற  பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கேரள காவல்துறையை கண்டித்து, தென்னைமரத்தில் தேள்கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதையாக, கன்னியாகுமரியில் பாஜக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பாஜக முழு அடைப்பு என்பதால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தேர்வுகள் கூட நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் பல இடங்களில் பேருந்துகள் மீது கல் வீசி தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் அவமதிப்பு நடந்திருந்தால் அங்கே சென்று போரட்டம் நடத்த வேண்டியதுதானே? நோட்டாவை விட கேவலமாக மதிக்கும் தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்கள் தமிழக மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.