Show all

தவிர்த்தார் முதல்வர் பழனிசாமி! ஸ்டாலினுடன் விமானப் பயணம்; அச்சமா? நாகரீகமா?

திமுக தலைவர் ஸ்டாலினுடன், முதல்வர் பழனிசாமி ஒரே விமானத்தில் பயணிப்பதான விபத்து நடக்கவிருந்தது. முதல்வர் பழனிசாமியின் முன்னெச்சரிக்கையால் தவிர்க்கப் பட்டது. என்பது போல இருக்கிறது எதிர்கட்சித் தலைவரை ஆளும் கட்சியின் முதல்வர் கண்டு விலகியிருப்பது.

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி, அதிமுக புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மகனின் திருமண விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி நேற்று திருச்சி வந்தார். மீண்டும் இரவு 8:10 மணிக்கு, ‘இண்டிகோ’ விமானத்தில், சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்; இதற்கான ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகளும் செய்திருந்தனர்.

இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, திமுக தலைவர் ஸ்டாலினும், அதே விமானத்தில், சென்னை செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திமுக தரப்பில் பேசி, ஸ்டாலினை வேறு விமானத்தில் செல்லுமாறு கேட்கப்பட்டதாம். அவர்கள் மறுத்து விட்டதால், ஸ்டாலினை சந்திக்க, முதல்வர் பழனிசாமி விரும்பாமல், நாமக்கல் வழியாக, சேலத்துக்கு காரில் சென்றார். சேலத்தில் இருந்து, இரவு, 11:00 மணி விமானத்தில், சென்னை புறப்பட்டு சென்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.