Show all

தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைக்கு இலவசமாக இந்தியா போர்க் கப்பல் வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:

ராமதாஸ்: இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான “ஐ.சி.ஜி. வராஹா” போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே, ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்வதற்காக இந்தக் கப்பலைப் பயன்படுத்திய இலங்கை, இப்போது தமிழக மீனவர்களைக் கைது செய்வதற்கும், சுட்டுக் கொல்லவும் பயன்படுத்தப் போகிறது. சொந்த நாட்டு மீனவர்களைத் தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் இந்தியாவுக்கு ஏற்படப் போகிறது. இந்தப் பழியைத் துடைக்க இலங்கைக்கு வழங்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

வைகோ: “வராஹா” போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது, ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்யப்பட்ட துரோகமாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் செய்கிறது. இந்தச் செய்கையைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.