சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார்.  அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. அங்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து பாடுகிறார்கள். பஜனை பாடும் மன்றமாக சட்ட மன்றம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. 110 விதியின் கீழ் அவர் வாசிக்கும் அறிக்கைகள் மக்களை ஏமாற்றக் கூடிய திசை திருப்பும் அறிக்கையாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. ஆனால் செயல்பாடு ஒன்றும் இல்லை.

வௌ;ளை அறிக்கை வேண்டும் என்று பல கட்சிகள் கோரிக்கை வைத் துள்ளன. தி.மு.க.வும் வௌ;ளை அறிக்கை கேட்டி ருக்கிறது. அதற்கு ஜெய லலிதா இதுவரை பதில் சொல்லவில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.