Show all

கோபிக்கிறார்கள் வடஇந்தியர்கள்! மதுரை முனியாண்டி கோவில் திருவிழாவில் ஊண்புலவு படையல் குறித்து

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவைப் படையலாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் வழங்கப் பட்டு வருகிறது.

இந்தக் கோயிலில் முனியாண்டியை வணங்க வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழாவில், சாலையில் செல்லும் அனைவருக்கும் ஊண்புலவு படையலாக கடந்த வெள்ளிக் கிழமை வழங்கி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

மதுரை முனியாண்டி கோவிலில் கடவுளுக்கு படையலாக ஊண்புலவு படைக்கப்பட்டது வடஇந்திய ஹிந்துக்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கீச்சுவில்; பலர் கோபமாக பதிவிட்டுள்ளார்கள்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே ஹிந்தி பேசும் மக்களுக்கு, இந்தியாவில் இருக்கிற எந்த மொழியையும் கற்க வேண்டிய சிக்கல் இல்லாமல், இந்தியாவில் ஹிந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கி, இந்தியாவின் வரலாறும், இந்தியாவின் சமயவியலும் தொடங்குமிடம் தமிழகம் என்பதை ஹிந்தி பேசும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமலே செய்து விட்டது கங்கிரஸ் கட்சி.

இன்றைக்கு உலகம் சுருங்கி விட்டது. சமூக வலைதளங்கள் உலகின் நடப்புகள் அனைத்தையும் ஒரு இடத்தில் கொண்டு வந்து குவிக்கிறது. 

ஹிந்தி பேசும் மக்களுக்கு தமிழகத்தின் நடப்புகள்: தமிழக மக்களின் 'மோடியே திரும்பிப்பே', முனியப்பன் கோயிலில் ஊண்புலவு படையல் என்பனவெல்லாம் செய்தியாக மட்டுமே கிடைக்கின்றன. 

ஹிந்தி மட்டுமே தெரிந்த மக்கள், இந்தியாவின் வரலாற்று அடிப்படை தெரியாத மக்கள். ஆங்கிலேய அறிஞர் பெருமக்கள் நாவலந்தேயத்தையே இந்தியா வென்று அழைத்தது தெரியாத மக்கள். ஆங்கிலத்தில் ஏன் இந்தியா என்று எழுதுகிறார்கள் நாம் மட்டும் ஏன் ஹிந்தியில் பாரத் என்று எழுதுகிறோம் என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கான தேவையே இல்லாமல் போனது. இந்தியாவின் ஆட்சிமொழிகளாக தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகள் அதிகாரம் பெற்றவைகள் என்பதை அறியாமலே இருப்பவர்கள்.

ஹிந்தி பேசும் மக்களின் தாய்மொழி வடமொழி, முதாதையர்கள் மொழி பாரசீகம், தற்போது நாம் வடமொழியில் எழுதுகிற உருது மொழியை ஹிந்தி என்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற வரலாறு தெரியாதவர்கள். இந்தியாவில் வந்து வடமொழி பேசிய காலத்தில் தமிழர் சமயங்களான சிவனியம் மாலியம் தாம் நமது ஹிந்துத்துவாவிற்கு அடிப்படை என்கிற வரலாறு தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள்.

இந்த சுருங்கி கொண்டு வருகிற உலகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. இது அவர்களுக்கு தொடக்கம் மட்டுந்தான்.

ஐயோ யாரவது இதை நிறுத்துங்களேன். இது ஹிந்து மதத்திற்கு எதிரானது.. என்று கோபமாக பொங்கி இருக்கிறார் ஒரு ஹிந்திக்காரர். இவரை போலவே பலர் தமிழரின் நெடிய வரலாற்று பாரம்பரியம் மிக்க நடவடிக்கையை புரிந்து கொள்ளாமல் கீச்சு பதிவிட்டிருக்கிறார்கள்.

ஐயோ இது என்ன அசைவக் கோயிலா என்று ஒருவர்  அதிர்ச்சியாக கேட்டு இருக்கிறார்.

இதுவா சாமி பிரசாதம்! வடஇந்தியாவை சேர்ந்த ஒருவர் இதை பிரசாதம் என்று அழைக்காதீர்கள் என்று கூறி புலம்பி இருக்கிறார். (சாதம், பிரசாதம் எல்லாம் இல்லை தம்பி! இது படையல். இதைத்தான் ஒங்க முன்னோர்கள் பிரசாதம் என்று மொழி பெயர்த்துக் கொண்டார்கள்)

ஏன் கோழியையும், ஆட்டையும் படையலாகப் படைக்கிறீர்கள், உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். இதை படையல் என்று எல்லாம் அழைக்காதீர்கள் என்று ஒருவர் கூறியுள்ளார்.

வாங்க தம்பிகளா சேர, சோழ, பாண்டியர்களைப் படியுங்க. கல்லணை கட்டிய கரிகாலனைப் படியுங்க. ஆண்பால் என்றால் ஆண்தான். பெண்பால் என்றால் பெண்தான். அஃறிணை உயிர்களை ஆண்பால், பெண்பால்  தழுவிய ஒன்றன்பால், என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகத்தை ஆண்பால் சுவரை பெண்பால் என்றெல்லாம் இலக்கணம் எழுதக் கூடாது என்கிற தமிழ்மொழியைப் படியுங்கள்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.