Show all

தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்

அமெரிக்காவின் எவ்வித நெருக்கடிக்கும் தமது நாடு ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை எனவும், தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

வட கொரியாவின் 70-வது தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபரும் உயரிய தலைவருமான ஜிம்ஜேங்யுன் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக இனி கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட அணிவகுப்பில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

வட கொரியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக வகை வகையான ஆளைளடைநள யனெ னுசழநௌ இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

கருப்பு உடையணிந்து ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிபர் ஜிம்ஜேங்யுன் பின்னர் தமது படையினருக்கு கை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதனையடித்து சிறப்புரையாற்றிய அதிபர் ஜிம்ஜேங்யுன தங்களது புரட்சிப்படை அமெரிக்காவின் எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க போதுமான சக்தியுடன் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதிபரின் பேச்சினிடையே பல முறை கரவொலி எழுப்பி மக்கள் தங்களது மகிழ்சியை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் உலகத்தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும், சீனாவின் மூத்த அரசியல்வாதியான லீயுன்சான் பங்கேற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.