Show all

5118வது தமிழ்ப் புத்தாண்டை பெருமையுடன் வரவேற்போம்

இன்று

ஞாயிறு உதயத்திலிருந்து 34வது நாழிகை

27வது விநாழிகையில்(இரவு7-48மணி)

பிறக்கும்

5118வது தமிழ்ப் புத்தாண்டை பெருமையுடன் வரவேற்போம். இன்றைய விஞ்ஞானத்தில் கருவிகள் மூலம் வான மண்டலம் குறித்து ஏராளமான செய்திகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

வானவியலுக்கு முன்னோடியான தமிழனுக்கு இத்தனைச் செய்திகளும் அன்றைக்கே தெரிந்திருந்தது. என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது.

பூமி ஞாயிறைச் சுற்றுகிறதா? ஞாயிறு பூமியைச் சுற்றுகிறதா என்பதைத் தமிழன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான் என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது.

ஆனால் ஞாயிறுக்கும் பூமிக்கும் தொடர்புடைய இரவு பகல் என்கிற நாள் சுழற்சி,

ஆறு பருவ மாற்றங்களை உள்ளடக்கிய ஆண்டுச் சுழற்சியைத் தெளிவாக அறிந்திருந்தான்.

நாள் சுழற்சிக்கு 60நாழிகை யென்றும் ஒரு நாழிகைக்கு 60 விநாழிகையென்றும் ஒரு விநாழிகைக்கு 60 தற்பரையென்றும்

அதே போன்று ஒரு முழுமையான ஆண்டு சுழற்சிக்கு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை யென்று காலத்தைக் கணித்து தலைமுறை தலைமுறையாக 5116 ஆண்டுகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான்.

சித்திரை,வைகாசி-இளவேனில்

ஆனி,ஆடி-முதுவேனில்

ஆவணி,புரட்டாசி-கார்

ஐப்பசி,கார்த்திகை-குளிர்

மார்கழி,தை-முன்பனி

மாசி,பங்குனி-பின்பனி

என்று அவன் கணித்த

பூமிக்கும்-ஞாயிறுக்கும் சம்பந்தப்பட்ட பருவகாலம் 5117 ஆண்டுகளாக வும் அப்படியே அதே மாதங்களில் நடைபெற்று வந்ததிலிருந்து ஓர் ஆண்டு என்பது 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை கொண்டது என்று தமிழன் 5117 ஆண்டுகளுக்கு முன்னமேயே கணித்தபடி

சரி

சரி

என்று இயற்கை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால் உலகினரோ ஒரு ஆண்டுக்கான கால அளவை முழுமையாக கணிக்க இயலாமல்

பருவகாலத்தைப் பொருத்திப் பார்த்து இன்றுவரை மாற்றம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை கீழ்கண்ட ஆங்கில ஆண்டு வரலாற்றை ஒப்பு நோக்கி அறியலாம்.

‘ஆங்கில வருடமானது ஐரோப்பாக் கண்டத்தில் ஏசு பிறந்த காலம் முதல் கணிக்கப் பெற்று வருகிறது. இந்த ஆங்கில வருடமானது நமது தமிழ் 3104ஆம் ஆண்டில் வியாழக் கிழமையன்று தொடங்கியது. அதாவது முதல் ஆங்கில ஆண்டின் முதல் தேதியானது வியாழக்கிழமையன்று ஆரம்பமாகியது.

ஆங்கில வருடமானது ஐரோப்பியக் காலண்டர்படி 365நாள் என்று ஆதியில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு தினத்தில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர்.

இந்த திருத்தத்தின் படி 400வருடத்திற்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வித்தியாசத்தைச் சரி படுத்த எண்ணி லீப் வருடகணித முறையைக் கொண்டு வந்தனர்.

கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி வருடத்தை சாதாரண வருடமாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வித்தியாசக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் வித்தியாசமாகும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் காலண்டரிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில வருடக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.’

இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5117 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட இன்று பிறக்கும் 5118 வது தமிழ்ப் புத்தாண்டை பெருமையுடன் வரவேற்போம்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.