Show all

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது புகார்

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.இதில் பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகாலெட்சுமி, கணேசன் ஆகியோர் பேசுகையில், பழனி அருகே உள்ள விலாங்கோம்பை தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையில் இருந்து பழனி கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால் தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

இப்பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் மாதவன் வாங்கினார். அதன் பிறகு மாதவன் தரப்பினர் 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து மின்வேலி அமைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் விளை பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த களம், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் நடிகர் மாதவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மேலும் எங்கள் நிலங்களையும் விற்கச்சொல்லி மறை முகமாக நெருக்கடி கொடுக்கின்றனர். பாசன வாய்க்கலை அழித்ததோடு, நடைபாதை, புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்த நடிகர் மாதவன் மீதும், துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.