Show all

குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு

தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டெல்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு பேச்சில் ஈடுபட்டு உள்ளது.

அதில் மத்திய அரசு தரப்பில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்ற தகவல், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டு வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசின் இந்த விருப்பத்தை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன.

குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டால் மிகக்குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி விடும்.

இதனால் தொழிலாளர்களின் வாக்குகளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வரும் தேர்தல்களில் கிடைக்கும் என்பது மத்திய அரசின் எண்ணம்.

ஆனால் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப் போவதில்லை என்பது தான் மத்திய அரசின் சூட்சுமமான முடிவு.

மாநிலங்களுக்கு ஏற்ப, தொழிலாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, குறைந்தபட்ச மாத சம்பளம் 7,100 ரூபாயாகவும் அதிகபட்ச சம்பளமாக, 20 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.