Show all

நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக் கழகம் அழைப்பு! தொடர்ந்து கௌரவப் பதவிகளை ஏற்று பணியாற்ற

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10 மாதம் பணி புரிந்தார். இந்நிலையில் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டும், அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு மடல் அனுப்பியுள்ளது. வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் தேவைக்கேற்ப, கவுரவ பதவியில் அஜித் ஆலோசகராக பணியாற்ற வேண்டும் என்றும் அவரை அண்ணா பல்கலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.