Show all

நாடகமாடும் மாநில அரசுகள் விஜயகாந்த் குற்றச்சாட்டு.

முல்லை பெரியாறு, காவிரி பிரச்னையில் மாநில அரசுகள்  நாடகம் ஆடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு.

புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் இன்று நடைபெற்ற பக்ரீத் விழாவில் பங்கேற்க வந்த போது செய்தியாளர்களிடம்,

காவிரி, முல்லை பெரியாறு நதி நீர் பிரச்னைகளில் இரு மாநில அரசுகளும்  நாடகம் ஆடுகிறது.

உட்கார்ந்து கொண்டு கடிதம் நடுவண் அரசுக்கு எழுதுவதை விட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்  பிரதமரை  நேரில் சந்திக்க முயற்சி செய்ய வேண்டும்.  

மின்வெட்டு பிரச்னை  இல்லையென கூறி வருகின்றனர். இந்த விழா நடந்து கொண்டிருந்தபோதே மின்தடை ஏற்பட்டதை அனைவரும் பார்த்தீர்கள்.

மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கூட மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற விஷயத்தில், அந்த விசாரணையே நடுவண் அரசு தான் வேண்டாம் என்று கூற வேண்டுமே தவிர மாநில அரசு அதைச்சொல்லக் கூடாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவை கூட்டி தீர்வு காண வேண்டும். இவ்விவகாரத்தை தேர்தல் ஆதாயமாக்கவே அதிமுக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இங்கு கருத்துக்கூற விரும்பவில்லை. தொகுதி வாரியாக தேமுதிக  நலத்திட்ட உதவிகளை அளித்து வரும் நிலையில், திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நமக்குநாமே நிகழ்ச்சி குறித்து கருத்துச்சொல்லி  வம்பில் மாட்ட விரும்பவில்லை. அதைப்பற்றி நீங்களே(பத்திரிக்கையாளர்கள்) முடிவு செய்து கொள்ளலாம் என்றார் விஜயகாந்த்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.