Show all

அமமுக புதிய பரிமானம்! அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்

தினகரன் அமமுகவை வழிநடத்துகிறார். சசிகலா அதிமுகவை மீட்கும் பொறுப்பில் ஈடுபடுகிறார். அதிமுகவைக் கைப்பற்றினால் அமமுக உடன் இணைப்பதாகத் திட்டம்.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தினகரன் அமமுகவை வழிநடத்துகிறார். சசிகலா அதிமுகவை மீட்கும் பொறுப்பில் ஈடுபடுகிறார். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அக்கட்சியை இணைப்போம் என தினகரன் கூறியுள்ளார்.
அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அசோக் நகரில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிகலாவிடம் ஆலோசனை செய்த பிறகே தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 
சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அக்கட்சியை அமமுக உடன் இணைப்போம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம்.
அமமுக துணைத்தலைவராக அவைத்தலைவரான நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும் என்று தினகரன் தெரிவித்தார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.