Show all

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான ஒத்திகையா! மோடி நடுவண் அரசின் வரவு-செலவுத் திட்டத்தைப் பாராட்டும் இரண்டே தலைவர்கள்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை பாராட்டும் இரண்டே தலைவர்கள். 1.தமிழக முதல்வர் பழனிசாமி 2.பாமக நிறுவனர் இராமதாஸ்

நடுவண் அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்;கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். உழவர்களுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என முதல்வர் கூறி மகிழ்ந்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்க பற்பல அம்சங்களும் ஏமாற்றமளிக்கும் சிற்சில அம்சங்களும் உள்ளன என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்: மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக உழவர்கள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் (அதாவது மாதத்திற்கு ரூ500 மட்டும். தமிழக அரசு நீண்ட நெடுங்காலமாக முதியோர் உதவித் தொகையே மாதம் ஆயிரம் வழங்கி வருகிறது. என்பது மோடிக்குத் தெரியாமல் இருக்கலாம், பாமக நிறுவனருக்கு கூடவா தெரியாது) என்கிற இந்த வரவு-செலவுத் திட்டம் பாராட்டிற்குரியது. 

மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.