Show all

மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்-ராகுல் காந்தி.

வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினால் மட்டும் போதாது, மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஒடிசா வந்திருந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மக்களின் மனதை புரிந்து கொள்ளாமல் பிரதமர் மோடி அவருக்கு விருப்பமானதை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். மன் கி பாத்தில் பேசுவதற்கு முன்பாக மக்களின் மனதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். பத்திரிக்கையாளர்கள் சிலர் என்னை விட மோடி நன்றாக பேசுவதாக கூறுகின்றனர். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏனெனில் நான் உண்மைகளையும், கடினமான எதார்த்தத்தையும் பேசுவதால் உங்களுக்கு அவ்வாறு தெரியலாம்.

அனைத்து துறைகளுக்கும் அதை செய்து தருவேன், இதை செய்து தருவேன் என்று வெறும் வாய் வார்த்தையாக மோடி பேசுகிறார். வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி என்று மோடி கூறி வருகிறார், சமூகத்தின் கடை நிலை மக்கள், தலித்துகள், விவசாயிகள் பற்றி மட்டும் காங்கிரஸ் பேசினால், உடனே வளர்ச்சி எதிரான பேச்சு என்று முத்திரை குத்த பார்க்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகளும் அவசியம் தான். ஆனால் அது மிகவும் நிதானமாக ஏழை மக்களை பாதிக்காத வகையில், வளர்ச்சியின் பலன்கள் அவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராடும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.