Show all

தமிழகத் தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில்,

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபான உரிம இடங்களுக்கு 14தேதி முதல் 16வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 19தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த 4 நாட்களும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும். அன்றன்றைய தினம் விதிமுறைகளுக்கு மாறாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.