Show all

நேரு பற்றிய குறிப்புகள், ராஜஸ்தான் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்

விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பற்றிய குறிப்புகள், ராஜஸ்தான் மாநில 8-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

ராஜஸ்தான் மாநில இடைநிலைப் பள்ளிக் கல்வி ஆணையத்துக்குட்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டம் திருத்தியமைக்கப்பட்டு இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சுதந்திர இயக்கம், சுதந்திரத்துக்குப் பின் இந்தியா ஆகிய இரு பகுதிகளிலும் ஜவாஹர்லால் நேரு, இந்திய சுதந்திரத்துக்காக ஆற்றிய பங்குகள், குறிப்புகள் ஆகியன நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுதந்திர இயக்கத் தலைவர் ஹேமு காலாணி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், வீர சாவர்க்கர் ஆகியோர் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

 

பள்ளிகளுக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படாதபோதிலும், அந்தப் புத்தகத்தின் மென்பொருள் பிரதியை, மாநில பாடநூல் வாரியம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

 

இந்த விவகாரம் அந்த மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.