Show all

30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு.

திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

நகரப் பகுதிகளின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் உருவாகும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து, முறையாக அப்புறப்படுத்துதல் மிகப் பெரிய சவாலாக அமைந்து உள்ளது.

கிராம ஊராட்சிகளில் கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் எனது அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2,000 கிராம ஊராட்சிகளில் ‘தூய்மை காவலர்களை’ கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்பதையும்; இதற்கென 300 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக 30 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக பகுதிகளை பசுமை மயமாக்கும் வண்ணம் ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் ஆகிய சாலைகளின் இரு மருங்கிலும் மரக் கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 2,000 கி.மீ நீளமுள்ள சாலைகளின்  இரு மருங்கிலும், 47 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மரக் கன்றுகள் நடப்பட்டு ஊரகப் பகுதிகள் பசுமை மயமாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.