Show all

22 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (8.12.2015) அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இன்று (8.12.2015) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் 5 கோடி ரூபாய்.

2. சத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநந்தமயி தேவி சார்பில், மாதா அம்ரிதாநந்தமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணாநந்தா புரி 5 கோடி ரூபாய்.

3. டபே லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மல்லிகா ஸ்ரீனிவாசன் 3 கோடி ரூபாய்.

4. ஜாய் ஆலுகாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜாய் ஆலுகாஸ் 3 கோடி ரூபாய்.

5. இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன் 2 கோடி ரூபாய்.

6. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஓய்.கே. கூ 2 கோடி ரூபாய்.

7. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் பி. ரமேஷ் பாபு 1 கோடி ரூபாய்.

8. சிட்டி யூனியன் பாங்க் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் என். காமகோடி 1 கோடி ரூபாய்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 22 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (8.12.2015) அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.