Show all

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்;பிரதேச மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எத்தனை பேர;கள் தெரியுமா?

23லட்சம் பேர்!

ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர் போட்டியிடுகிறார்கள் என்று கணக்காகிறது.

இந்த நிலைமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் வேலையில்லாத் திண்ட்டாட்டத்தைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.

இதில் இன்னும் வேடிக்கையான விசயம் என்னவென்றால், விண்ணப்பித்தவர்களில் பலர் பட்டதாரிகள். சிலர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் கூட!

விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நேர்காணல் நடத்த வேண்டுமென்றால், அது நடந்து முடிய நான்காண்டுகள் ஆகும் என்று உத்தரப்பிரதேச அதிகாரிகள் கூறுகிறார்கள்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.