Show all

ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு அதிபர் பசார் அல் ஆசாத்தான் காரணம். எனவே அவர் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக அதிபர் பசார் அல் ஆசாத் ரஷிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்,

நான் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த பதவியில் இருக்கிறேன். இனி அடுத்த தேர்தல் நடக்கும்போது மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி நான் செயல்படுவேன். மக்கள் நினைத்தால் மட்டுமே நான் பதவி விலகுவேன். மற்றபடி பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை.

இன்று சிரியாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மேற்கத்திய நாடுகளும் முக்கிய காரணம் ஆகும். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் தான் காரணமாக இருந்தன.

இந்த தீவிரவாதிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இந்த நாடுகள் உரிய முயற்சி மேற்கொள்ள வில்லை. இன்று தீவிரவாதிகளால் தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு அரசு காரணம் அல்ல. இதுவரை 40 லட்சம் மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதில் 30 லட்சம் பேர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். 10 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகள் இந்த விஷயத்தில் சிரியா அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ரஷியா, ஈரான் நாடுகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளும் எங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.