Show all

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50 கோடி பணம் தருவதாக பாஜக பேரம்

உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. 70 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 32 மற்றும் பாஜவுக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் திடீர் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைக்க முயன்றது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50 கோடி பணம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக பாஜ பேரம் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திர பண்டாரி மற்றும் ஜித்ராம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல் துணை சபாநாயகர் அனுசுயா பிரசாத் மைக்குரியையும் கட்சி மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் (காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரை அல்ல), 12 பேரை பாஜவுக்கு ஆதரவாக மாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர பண்டாரி கூறுகையில்,

“முதலில் ரூ.2.50 கோடி பின்னர் ரூ.5 கோடி, ரூ.10 கோடி என பேரம் உயர்ந்து கடைசியில் ரூ.50 கோடிக்கு வந்தது. ஆனால் எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது”

என்றார்.

ஜித்ராம் கூறுகையில்,

“நாங்கள் காங்கிரசின் உண்மையான தொண்டர்கள். கட்சியிலேயே தொடர்ந்து நீடிப்போம்”

என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.