Show all

சச்சின் தெண்டுல்கர் கடவுள் போன்றவர்: மகேந்திர சிங் டோனி

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர்  பற்றி  கூறியதாவது:-

நாங்கள் இளம் பருவத்திலேயே தெண்டுல்கரின் ஆட்டத்தை மிகவும் உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் எல்லோருக்கும் அவர் கடவுள் போன்றவர். அவரை சுற்றி அத்தகைய ஒளிவட்டம் இருந்தது. தெண்டுல்கர் மிகச்சிறந்த முன் மாதிரி. அவர் வெற்றிகரமான வீரராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர். சச்சின் ஒரு சிறந்த முன் மாதிரி. அவர் ஒவ்வொரு முறை மைதானத்தில் நுழையும்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலம் முதலே எப்படி விளையாட வேண்டும் என்ற வழிமுறை வகுத்து நம்பிக்கையுடன் செயல்பட்டார்.

ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும் ஒரு கிரிக்கெட் வீரராக ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் செலுத்தினார். அவரது அனைத்து செயல்பாடுகளும் உயர்வான லட்சியம் கொண்டதாகவும், எல்லோரும் பின்பற்ற கூடியதாகவும் இருந்தது எனலாம்.

2011-ம் ஆண்டு உலக கோப்பையை நாங்கள் வென்றது இந்திய அணிக்கு மட்டுமின்றி, அது நாட்டுக்கும் மிகப்பெரிய விஷயமாகும். வாழ்க்கையில் ஏதார்த்த நோக்குடனும், நேர்மையாகவும் இருப்பது முக்கியம். ஒவ்வொரு நாளும் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியமானதாகும். ஏனெனில் உங்களது ஒவ்வொரு சிறிய செயல்பாடும், நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதனை அடைய உதவிகரமாக இருக்கும். பெரிய இலக்குகளை விட நடைமுறையில் செய்யும் சிறிய விஷயங்கள் நமக்கு முக்கியம். கனவு காண்பது என்பது மிகவும் முக்கியம் தான். அதேநேரத்தில் நிகழ் காலத்தையும் மறந்து விடக்கூடாது.  இவ்வாறு அவர் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.