Show all

மழை விட்டாலும் விடாது அடிக்கும் தூவானம்! காபந்து ஆட்சியில் பாஜக அடாவடி- எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் சோதனை

காபந்து ஆட்சியினரின் அடாவடி, எதிர்கட்சியினர்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறது. கனிமொழி குற்றச்சாட்டு.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அங்கு கோடி கோடியாக பணம் இருக்கும். அங்கு சோதனை செய்ய தயாரா? காட்டத்துடன் கொந்தளிக்கிறார் கனிமொழி!
நாடாளுமன்ற தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் கருத்துப் பரப்புதல் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
கனிமொழி தெரிவித்ததாவது: 'சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். 
சோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா?. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்' என்றார்.
வானளாவிய அதிகாரம் கொண்ட நடுவண் அரசில்- காங்கிரஸ் அமரும் போதும் சரி, பாஜக அமர்ந்திருக்கிற தற்போதைய நிலையிலும் சரி, வெல்லும் வாய்ப்புள்ள கட்சியின் மீது (தற்போது திமுக), தோல்வியை தழுவ வாய்ப்புள்ள கட்சியின் (தற்போது அதிமுக) தோளில் அமர்ந்து கொண்டு, சட்டத்தின் மூலமாக மக்கள் அரங்கத்தில் அவதூறு கிளப்பி அசிங்கப் படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. 
ஆனாலும், திமுகவும், அதிமுகவும் மாறி மாறி காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் சோரம் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. இத்துனையும் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அத்தனையையும் தாண்டி தமிழக மக்கள் இந்தமுறை திமுகவிற்கு ஆட்சி வழங்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்கள். திமுக வெல்லும் அல்ல ; திமுகவிற்கு வெற்றி வழங்கப்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,125.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.