Show all

செம்மரகட்டை தீர்ப்பு தேசிய மனித உரிமை ஆணையம்

ஆந்திரா சித்தூர் பகுதியில் கடந்த மாதம் நடந்த போலீஸ் என்கோண்டேரில் தமிழ்நாட்டை சார்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது முதன்மையாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை மேற்கொண்டது அதன் தீர்ப்பு இன்று வெளியானது.

அதில் குறிபிட்டுல்லதாவது என்கவுன்ட்டர் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சத்தை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என்றும் மேலும் உயிரிழந்தவர்களில் 13 பேர் பழங்குடியினராக இருப்பதால், அவர்களுக்கு மேற்கண்ட இழப்பீடு முறையாகச் சென்று சேர்கிறதா என்பதை மாவட்ட குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசும், ஆந்திர அரசும் இதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன என்பது குறித்த அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.இது தொடர்பான சாட்சியங்களை தமிழகத்தில் உள்ள தகுந்த குற்றவியல் நடுவர் முன்பு விரைவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.