Show all

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும்

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இப்போதே பலரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வடிவமைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பெண்கள் அணியும் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளில் விநாயகர் படத்தை பொறித்து விற்பனை செய்து வருகிறது. இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நீச்சல் உடை விற்பனையை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும் என்று பிரபஞ்ச இந்து சமுதாய அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது இந்து கடவுளை இழிவுபடுத்தும் இந்த செயல் கண்டனத்துக்குரியது.

வணக்கத்திற்குரிய ஒரு கடவுளின் உருவத்தை பெண்களின் உடைகளில் பொறித்து விற்பது மிகவும் தவறு. இந்த நிறுவனம் உடனடியாக இத்தகைய உடைகளை தயாரிப்பதை நிறுத்துவதோடு, விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆடைகளையும் திரும்ப பெற வேண்டும். இந்து மக்களிடம் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.