Show all

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட கால் கோரிக்கை விரைவில் நிறைவேறும்

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என தெரிகிறது. உலகில் 98 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 7 நாடுகள் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. 35 நாடுகளில் மரண தண்டனையை நிறுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என பல சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதே நிலைப்பாட்டை மத்திய அரசு நியமித்துள்ள சட்ட கமிஷனும் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்ட கமிஷன் உறுப்பினர்களுக்கிடையே பரிமாறப்பட்டுள்ள கருத்துக்களில், தீரவாதக் குற்றங்களைத் தவிர இதர கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டாம் என்ற பரிந்துரை இடம்பெற்றுள்ளது. இதற்கு சட்ட கமிஷனின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சட்ட கமிஷனின் அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் மரண தண்டனையை ஒழிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.