Show all

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம். ரஜினி காந்த் நன்றி

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

இதற்கு ரஜினி காந்த் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.