Show all

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க அதிவிரைவு குழுக்கள்

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க 5 இடங்களில் அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,

காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் மற்றும் கரடிகளால் மனித-வன உயிரின மோதல்கள் தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அத்தகைய மோதல் சூழ்நிலைகளில் அதிவிரைவான செயல்பாட்டுக்கென ஒரு குழுவினை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதி நவீன கருவிகளுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டதாக அமையப் பெறும் இக்குழு, விரைவாகச் செயல்படுவதுடன், சிக்கலான சூழ்நிலைகளையும் மேலாண்மை செய்யும்.

மேலும், புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித-வன உயிரின மோதல்களில் ஈடுபடும் மாமிச உண்ணிகளை எதிர்கொள்வதற்கு அதிவிரைவு குழுக்கள் உருவாக்குவதை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஊட்டி, கூடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 2015 - 2016-ஆம் ஆண்டில் 8 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.