Show all

இந்தியா - தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கிரிக்கெட்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள கிருஷ்ணகிரி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தென்ஆப்பிரிக்கா.

சிறப்பாக ஆடிய அந்த அணி, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் என்ற நல்ல வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு 75 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக அந்த அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் இடது கை டெஸ்ட் தொடக்க வீரர் வான் ஸ்யல் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய தரப்பில் அஸ்கர் படேல் 27.5 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற ஸ்பின்னர்களான ஜெயந்த் யாதவ் 3 மற்றும் கரண் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இன்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. தமிழத்தை சேர்ந்த அபினவ் முகுந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் குவித்தார். அதேபோல் அணியின் கேப்டன் அம்பதி ராயுடுவும் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன் எடுத்திருந்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் டென் பய்டிட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.