Show all

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான மக்களை, குறிப்பாக சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் பலியானவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் அங்குள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார், ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இங்கு பஞ்சாயத்து ராஜை கொண்டு வர வேண்டும் .ஏனெனில் இது ஒருமாநிலத்தின் அடிமட்ட நிலை ஜனநாயகம் ஆகும். பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு நாம் அதிகாரம் அளிக்கும் வரை, ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் அமைதி திரும்ப போவது இல்லை.

பஞ்சாயத்து ராஜின் கீழ் உங்களுக்கு அதிகாரம் வழங்கும் பணிகள் செய்யப்படவில்லை என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும். இங்கு பேசிய ஒன்றிரண்டு உறுப்பினர்களின் பேச்சில் தங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்பது பிரதிபலித்தது. மாநிலத்தில் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்தால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பை காங்கிரஸ் பலப்படுத்தும். அதேபோல், மாநில மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வோம். இவை அனைத்தும் மிகப்பெரிய பிரச்சினைகள். இது ஒருநாளில் தீர்க்க முடியாது. சில காலம் பிடிக்கும். ஜம்மு காஷ்மீரின் ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியலில் உங்களுக்கு பெரிய பங்களிப்பு உள்ளது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.