Show all

ராணுவ அமைச்சகம், ராம்தேவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

'யோகா குரு” ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி” யுடன், ராணுவ நிறுவனமான, டி.ஆர்.டி.ஓ., தான் தயாரிக்கும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி மலைகள் சூழ்ந்த சியாச்சின் பகுதியில், 'டிஹார்” என்ற பெயரில், ராணுவ ஆராய்ச்சி மையத்தை, டி.ஆர்.டி.ஓ., நடத்தி வருகிறது. சியாச்சின் பகுதியில் விளையும், அபூர்வ மருத்துவக் குணங்கள் கொண்ட ஒரு தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு, சில சத்து மருந்துகளை, டிஹார் தயாரிக்கிறது.அவற்றை, நாட்டின் பிற பகுதிகளுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை, ராணுவ அமைச்சகம், ராம்தேவ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது..

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.