Show all

சிபிஐ விசாரணை கோரி நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள்

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மரக் கடத்தலில் தொடர்புடையதாக கூறி அப்பாவி தமிழர்களை கொன்ற ஆந்திர அரசை கண்டிக்கவோ, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தவோ தமிழக அரசு முன் வராதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி நாளை சென்னையிலும், நவம்பர் 8 ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க வேண்டுமென்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.