Show all

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நேற்று காலை முதல் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று மதியம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை இது 21 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

விடுமுறை தினமான நேற்று ஒனேக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் நடைபாதைக்கு மேல் செல்லும் தண்ணீரில் நடந்து சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் திடீர் வௌ;ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் மாமரத்துகடவு பரிசல் துறையில் இருந்து பரிசலை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஊட்டமலை, கோத்திக்கல், ஆலம்பாடி மற்றும் மாறுகொட்டாய் பரிசல் துறைகளில் இருந்து மட்டும் பரிசலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அருவிகளில் வௌ;ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஆபத்தான பகுதிகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது. நேற்று காலை அணைக்கு 16 ஆயிரத்து 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 18 ஆயிரத்து 867 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91.59 அடியில் இருந்து 92.19 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.