Show all

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச முடியாது என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதலில் 60 எம்.எம். மோட்டார் பீரங்கிகளையும் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது. அதே வேலையில் பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி அடவாடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 52 தாக்குதலும், நடப்பு ஆண்டில் இதுவரை 245 தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் வகையிலேயே அந்நாட்டு ராணுவம் இத்தகைய தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.