Show all

கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது

கலாச்சார சின்னமாக விளங்கும் பழமையான கட்டிடக் கலையுடன் உள்ள கோவில்களை சேதப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களை அகழ்வாரய்ச்சியாளர்களும், மக்களும் எதிர்த்து வந்த நிலையில், கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது. இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இயக்குனர் ராஜேஷ் இதுபற்றி கூறும்போது, முன்பெல்லாம் ஏ.வி.எம்., விஜயா வாஹினி போன்ற பல ஸ்டுடியோக்களில் கோவில் செட்கள் போடப்பட்டிருக்கும்.

அதில் படப்பிடிப்பு நடத்த விரும்பினால், குறிப்பிட்ட வாடகையை செலுத்தி படம் எடுத்துக் கொள்ளலாம். தற்போது அதுபோன்ற நிரந்தர செட்கள் இல்லாதிருப்பதால் ஒவ்வொரு படத்துக்கும் புதிய செட் அமைக்க வேண்டிவரும். இதற்காக அதிக தொகையையும் செலவு செய்ய வேண்டிவரும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி,சினிமாக்கள் வெறும் வணிகரீதியான படைப்பு மட்டுமல்ல. அது முன்னர் வாழ்ந்த மூதாதையரின் கலாச்சாரத்தை பின்வரும் சந்ததிக்கு தெரியப்படுத்தும் ஊடகம்.

ஏற்கனவே, பல கோவில்களில் படப்பிடிப்புகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்ட நிலையில், அரசும் இதனை ஆதரித்தால், நமது கலை, கலாச்சார சின்னங்களை உலகுக்கு தெரியப்படுத்த வாய்ப்பின்றி போகும். ஆகையால், சினிமாக்காரர்கள் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்க வேண்டும என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.