Show all

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. எனினும், இதுவரை அந்த வசதி பயன்படுத்தப்படவில்லை. மேலும் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் தேசியப் பாதுகாப்புச் செயலர்கள் இடையிலும் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த வகையில், அமெரிக்க அதிபருடன் பேசுவதற்காக ஹாட்லைன் வசதி செய்து கொடுக்கப்பட்ட 4-ஆவது நாடு இந்தியா ஆகும். ஏற்கெனவே, ரஷியா, பிரிட்டன், சீனா ஆகிய 3 நாடுகளுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.