Show all

முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்காக ஆகஸ்ட் 20 ம்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்; மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் பாசனத்திற்காக 20.ம்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.